மாங்குளம் சம்பவம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

0
68

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம் பகுதியில் வசித்துவரும்குடும்பம் ஒன்றில் இரண்டு பெண்களை மயக்கி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவரை பிரதேச வாசிகள் கட்டிவைத்து நையப்புடைத்து பொலீசில் ஒப்படைத்துள்ளார்கள்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்…

யாழ்ப்பாணம் பருத்தித்துறையினை சேர்ந்த நபர் 01.05.2025 அன்று மாங்களம் பகுதியில் உள்ள குடும்பம் ஒன்றின் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த இரு பெண்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு முயற்சித்த வேளை அயலவர்களால் மீட்கப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபரை மக்கள் நையப்புடைத்துவிட்டு பொலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

கனடாவினை சேர்ந்த குறித்த சந்தேக நபர் இந்த குடும்பத்துடன் தொலைபேசியில் உறவினை பேணிவந்துள்ளார், இதற்கு முன்னரும் இந்த வீட்டிற்கு வந்து இவ்வாறான செயலில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து மாங்குளம் வரும்போது குறித்த நபர் கத்தி, மின்சாரத்தில் சொக்கொடுத்து (Electric Stroke) ஆட்களை மயக்கும் இயந்திரம், மயக்க மருந்து என்பன கொண்டுவந்துள்ளார்.

இவர் குறித்த வீட்டிற்கு சென்றபோது அங்கு குடும்பத்தலைவன் இல்லாத நிலையில் வீட்டு பெண்ணின் கழுத்தினை திருவி நிலத்தில் விழுத்தி மின்சார சொக்கொடுக்கும் இயந்திரம் கொண்டு குறித்த குடும்ப பெண்ணின் பின்பக்கத்தில் மின்சரத்தினை கொடுத்து அவரை மயக்கியுள்ளதுடன், பாலியல் முயற்சிக்கு முயன்றுள்ளார். இந்த சம்பத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த சம்பத்தினை தொடர்ந்து குறித்த நபரை மக்கள் பிடித்து நையப்புடைத்துவிட்டு (கட்டி வைத்து தர்ம அடி கொடுத்து விட்டு) மாங்குளம் பொலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்கள். இந்த சம்பவம் மாங்குளம் பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

வீட்டில் இருந்த இரண்டு பெண்களை பாலியல் முயற்சிசெய்த இந்த நபரை பாலியல் வன்முறை சட்டத்தின் கீழ் மாங்குளம் பொலீசார் சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரப்படுகின்றது.(Photos-FB)