முல்லைத்தீவில் வேட்பாளரை தேடி பொலிஸார் வலைவீச்சு..!

0
49

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறை பற்ற பிரதேச சபை தேர்தலுக்காக வீட்டு சின்னத்தில் தமிழரசு கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தனது போஸ்டர்கள் கொடுத்த அச்சிடப்பட்ட சம்பவம் ஒன்று தொடர்பில் போலீசார் வேட்பாளரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

முள்ளியவளை கிழக்கு பிரதேசத்தில் வேட்பாளர் பல வீடுகளுக்கு சென்று வே.பிரபாகரன் அவர்களின் படம் பொறிக்கப்பட்ட வீட்டு சின்னத்துக்கு புள்ளடி இடுமாறு துண்டு பிரசுரங்களை வழங்கி வந்துள்ளார்.

இந்த சம்பவம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து குறித்த பகுதியில் போலீசார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதுடன் இவ்வாறு துண்டு பிரசுரங்கள் வாங்கிய மக்களிடம் வாக்குமூலம் பெற்று வழக்கு பதிவு ஒன்று செய்துள்ளார்கள்.

இதேவேளை குறித்த வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளரை வலைவீசி தேடு நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றார்கள், இதுவரை அவர் எந்தவித தொடர்புகள் அற்ற நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை வேட்பாளரின் இந்த செயற்பாட்டுக்கு ஏனைய கட்சிகளும் விசனம் வெளியிட்டுள்ளார்.