வீதியை கடக்க முற்பட்ட பெண் மோட்டார் சைக்கிள் மோதியதில் உயிரிழப்பு.!

0
34

நீர்கொழும்பு – கொழும்பு பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (01) காலை இடம்பெற்றுள்ளது.

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை கடக்க முற்பட்ட பெண் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பெண் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கொட்டுகொட பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய பெண்ணொருவர் ஆவார்.

இது தொடர்பில் வத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.