கடவுச்சீட்டு ஒருநாள் சேவை 5, 6, 7 ஆம் திகதிகளில் இல்லை..!

0
229

ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரம் செயற்படும் சேவை எதிர்வரும் 05, 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் நிறுத்தப்படும் என பதில் குடிவரவு குடியகல்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த திகதிகளில் ஏனைய சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பதில் குடிவரவு குடியகல்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.