அம்பலங்கொடையில் உள்ள வங்கி பெட்டகத்திலிருந்து பாதாள உலகக் குழுத் தலைவர் அருமஹந்தி ஜனித் மதுஷங்க சில்வா என்றழைக்கப்படும் ‘”பொடி லெசி’யின் மாமியாருக்குச் சொந்தமான தங்கம் என சந்தேகிக்கப்படும் ஒரு தொகுதி நகைகளை சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவு பறிமுதல் செய்துள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ்,”பொடி லெசி மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் மீது விசாரணை தொடங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில், பொலிஸ் அதிகாரிகள் வங்கியில் இருந்து 1.112 கிலோகிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் கிடைத்த வருமானத்தைப் பயன்படுத்தி நகைகள் வாங்கப்பட்டதா என்பதை அறிய மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.