பொலன்னறுவை – ஹபரனை பிரதான வீதியின் மின்னேரிய இராணுவ முகாமுக்கு அருகில் இன்று (01) பிற்பகல் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பேரூந்தின் சாரதி உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவரின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கதுருவெலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் கொழும்பிலிருந்து கதுருவெல நோக்கி பயணித்த தனியார் பேருந்துமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
இரண்டு பேருந்துகளிலும் காயமடைந்த பயணிகள் பொலன்னறுவை மற்றும் ஹிங்குராக்கொட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடல்பில் மின்னேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.