கல்கிஸ்ஸை பகுதியில் இளைஞன் ஒருவர் சடலமாக மீட்ப்பு.!

0
27

கொழும்பு – கல்கிஸ்ஸை, ஹுலுதாகொட பகுதியில் உள்ள பாழடைந்த காணி ஒன்றிலிருந்து கூர்மையான ஆயுதங்களால் தாக்கி எரிக்கப்பட்ட நிலையில், ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் ரத்மலானை, மஹிந்தாராம வீதியை சேர்ந்த 23 வயதுடைய டிகிரா என்றழைக்கப்படும் காவிந்த கயாஷன் ரணவக்க என்பவராவார்.

குறித்த இளைஞன் காணாமல் போயுள்ளதாக அவரது தாயார் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கொலையுடன் தொடர்புடைய இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு முச்சக்கர வண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.