யாழில் 448 கிலோகிராம் மஞ்சள் தொகை பறிமுதல்.!

0
31

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 448 கிலோகிராம் மஞ்சள், யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற விசாரணை பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று மண்டைதீவில் இந்த கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடத்தலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற இருவர் தப்பியுள்ளதாகவும், அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்..