பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுமுறை.!

0
112

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 5ஆம், 6ஆம், 7ஆம் திகதிகளில் அனைத்துப் பல்கலைக்கழகங்கள், வளாகங்கள் மற்றும் நிறுவகங்களில் பயிலும் இளமாணி மற்றும் பட்டமேற்க் கல்வி மாணவர்களுக்கு உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு விடுமுறை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் பேராசிரியர் கபில செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.