கணேமுல்ல சஞ்சீவ கொலை – சந்தேகநபருக்கு பிணை..!

0
9

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் பாதாள உலகக் குழு தலைவர் என்று கூறப்படும் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஆதரவு வழங்கியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பூஸா சிறைச்சாலையின் முன்னாள் சிறை அதிகாரியை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபரின் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட பிணை விண்ணப்பத்தை ஆராய்ந்த பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

அதன்படி, சந்தேக நபரை ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், 25 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையிலும் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த பிணை மனு மீதான விசாரணையின் போது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களில் சந்தேக நபர் சம்பந்தப்பட்ட குற்றத்தில் ஈடுபட்டிருப்பது வெளிப்படுத்தப்படாததால் அவரை பிணையில் விடுப்பதாக நீதிபதி அறிவித்தார்.