நாளை சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்..!

0
222

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் வெப்பத்தின் அளவு, மனித உடலால் உணரப்படும் அளவிற்கு நாளைய தினம் (24) அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

எனவே பொதுமக்கள் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.