சற்றுமுன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு.!

0
237

கட்டான பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று இரவு 7.10 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நபர் ஒருவர் வர்த்தகர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்க முற்பட்டுள்ள நிலையில் குறித்த வர்த்தகர் தான் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியால் குறித்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட நபர் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் என தெரிவிக்கப்படுகிறது.