மைத்திரி சி.ஐ.டி.யில் முன்னிலை..!

0
105

ஜனாதிபதி நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (சிஐடி) வரவழைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் பதவிக் காலத்தில் அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி ஒதுக்கப்பட்டது தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே அவர் அழைக்கப்பட்டிருந்தார்.