இராஜாங்கனையில் தந்தை, மகன் படுகொலை சம்பவம்; இரு சகோதரர்கள் கைது.!

0
154

அநுராதபுரம் – இராஜாங்கனை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தந்தை மற்றும் மகன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சகோதரர்கள் இருவர் இராஜாங்கனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கொலை சம்பவம் கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய தந்தையும் 26 வயதுடைய மகனுமே கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், 27 மற்றும் 23 வயதுடைய இரண்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட தந்தையும் மகனும் பல ஆண்டுகளுக்கு முன்னர் சந்தேக நபர்களின் தந்தையை தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.