தேவேந்திர முனை படுகொலை சம்பவம் – சந்தேகநபர்கள் இருவர் பொலிஸில் சரண்..!

0
147

கடந்த மாதம் 21 ஆம் திகதி தேவேந்திர முனை ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்திற்கு முன்பாக சிங்காசன வீதியில் இரு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (07) குறித்த சந்தேக நபர்கள் இரு சட்டத்தரணிகளுடன் கந்தர பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களில் ஒருவர் துப்பாக்கிதாரி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேக நபர்கள் மனித படுகொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 26 மற்றும் 35 வயதுடைய, கந்தர மற்றும் தேவேந்திர முனைபிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.