மொரட்டுவ கடற்கரையில் மீட்க்கப்பட்ட பெண்ணின் சடலத்தால் பரபரப்பு.!

0
118

கொழும்பு – மொரட்டுவ பொலிஸ் பிரிவின் உஸ்வத்த சுற்று வீதிப் பகுதியில் உள்ள கடற்கரையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கெசல்வத்த பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மொரட்டுவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மொரட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.