பணத்திற்கான தம்பியை கொ.ன்.ற அண்ணன் – இலங்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!

0
121

இரண்டு சகோதரர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், மூத்த சகோதரர் கூரிய ஆயுதத்தால் தம்பியைத் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜா – எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏக்கல, சாந்த மேத்யூ மாவத்தை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

உயிரிழந்தவர் ஏக்கல, சாந்த மேத்யூ மாவத்தையைச் சேர்ந்த 24 வயது இளைஞர் என தெரியவந்துள்ளது.

பணத் தகராறு தொடர்பாக இரண்டு சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து, மூத்த சகோதரர் கூரிய ஆயுதத்தால் தம்பியைத் தாக்கி கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஏக்கல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சடலம் ராகம மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது, சம்பவம் தொடர்பில் ஜா – எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.