இ.போ.ச பேரூந்து மோதியதில் இரண்டு வயது சிறுவன் உயிரிழப்பு..!

0
161

இரண்டு வயது சிறுவன் ஒருவன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மோதி உயிரிழந்துள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், புதன்கிழமை (02) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் வஸ்கடுவ காலி வீதியைச் சேர்ந்த நிஹன்சா யாஷ் வீரதுங்க என்ற சிறுவன் என்று பொலிஸார் தெரிவித்தனர். பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டு, களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என்றும் களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர்.