பொரளை மலர்சாலைக்கு கொண்டுவரப்பட்ட சஞ்சீவவின் சடலம்.. பொறுப்பேற்ற சகோதரி.!

0
200

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், தற்போது மேலும் பல தகவல்களை வௌியிட்டுள்ளனர்.

அதன்படி, துப்பாக்கிதாரியும், அந்தப் பெண்ணும் கடுவெல பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் ஒன்றில் இருந்து இந்தக் கொலையைச் செய்ய வந்திருப்பது தெரியவந்துள்ளது.

குறித்த ஹோட்டலில் இருந்து புதுக்கடை நீதவான் நீதிமன்றிற்கு வருவதற்காக பயன்படுத்தப்பட்ட கம்பஹா, மல்வத்து, ஹிரிபிட்டிய பகுதியில் இருந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட வாகனத்தையும் கொழும்பு குற்றப்பிரிவு பறிமுதல் செய்துள்ளது.

இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் உடல் நேற்று (20) பிற்பகல் பொரளையில் உள்ள தனியார் மலர்சாலைக்கு கொண்டு வரப்பட்டது.

கொழும்பு பொலிஸ் பிரேத அறையில் நேற்று பிற்பகல் சடலத்தின் பிரேத பரிசோதனை இடம்பெற்ற நிலையில், அவரது மூத்த சகோதரி உடலைப் பெற வந்திருந்தார்.