ஏறாவூரில் வர்த்தகரைத் தாக்கிய இரு பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்.!

0
113

ஏறாவூரில் வர்த்தகர் ஒருவரைத் தாக்கிய இரு பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஏறாவூர் – மைலம்பாவெளி பிராதன வீதியில் மதுபோதையில் சிவில் உடையில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த இரு பொலிஸ் அதிகாரிகளின் மோட்டார் சைக்கிளை முந்திச் சென்ற வர்த்தகர் ஒருவரை தலைக்கவசத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்கள்.

இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை (18) இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றது.

இச் சம்பவத்துடன் தொடர்புபட்ட இரு பொலிஸ் அதிகாரிகளும் உடனடியாக வியாழக்கிழமை (20) பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாகக் குறித்த உயர் பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.