கொழும்பில் மனைவியுடன் சென்ற 22 வயது இளைஞனுக்கு நேர்ந்த கொடூரம்.!

0
252

கொழும்பு – கொட்டாஞ்சேனை புளூமெண்டல் ரயில் வீதிக்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் நேற்றிரவு (18) தனது மனைவியுடன் ரயில் பாதைக்கு அருகில் சென்றுகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் அவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞரொருவரே இவ்வாறு கொலை செய்யபட்டுள்ளார்.

சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.