லொறி மோதியதில் பெண்ணொருவர் உயிரிழப்பு.!

0
110

வரகாபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு – கண்டி வீதியின் தும்மலதெனிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்த லொறியொன்று வீதியைக் கடந்துக்கொண்டிருந்த பெண் ஒருவர் மீது மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த பெண் வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக தெரியவருகிறது.

உயிரிழந்தவரின் அடையாளங்கள் இதுவரையில் உறுதிப்படுத்தவில்லை.