மாசமாக இருப்பதாக பொ-ய் கூறிய கள்ளக்காதலிக்கு நேர்ந்த கொடூரம்..!

0
183

திருச்சி மாவட்டம் சமயபுரம் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு முட்புதரில் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பெண்ணின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், பெண்ணை கொடூரமாக கொலை செய்த மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், சேலம் மாவட்டம் தலைவாசலை சேர்ந்த விக்னேஷ் என்பவர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

திருமணமாகாத விக்னேஷ் ஒவ்வொரு கிராமமாக சென்று கட்டிட வேலை செய்து வந்தார். அப்போது, ​​திருச்சியில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்த ஒரு பெண்ணுடன் விக்னேஷ் பழகினார். அந்தப் பெண் ஏற்கனவே திருமணமாகி, கணவரை பிரிந்து வசித்து வந்தார். விக்னேஷ் உடனான நெருங்கிய தொடர்பு காரணமாக அந்தப் பெண் கர்ப்பமானதாகத் தெரிகிறது. இதன் விளைவாக, கருக்கலைப்பு செய்ய விக்னேஷிடம் அந்த பெண் ரூ.13,000 கேட்டதாக தெரிகிறது.

பணம் கொடுத்த பிறகு, அந்தப் பெண் விக்னேஷ் உடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால் கோபமடைந்த விக்னேஷ், அந்த பெண்ணிடம் “நீ உண்மையிலேயே கர்ப்பமாக இருக்கிறாயா?” என்று கேட்டார். கருக்கலைப்புக்கு பணம் வாங்கிய பிறகு, ஏன் என்னிடம் பேசவில்லை என்று கேட்டார். ஒரு கட்டத்தில், கோபமடைந்த விக்னேஷ், கர்ப்பம் என நடித்து ஏமாற்றியதால் அந்த பெண்ணை கழுத்தை சேலையால் நெரித்து, கொலை செய்து, உடலை ஒரு புதரில் வீசியது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.