நாடு முழுவதும் இன்றும் (13) மின்வெட்டு..!

0
241

மின் விநியோகத் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் பகுதிகள் மற்றும் நேர அட்டவணையை இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இன்று (13) ஒரு மணி நேரம் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என CEB அறிவித்துள்ளது.

இதன்படி, வெவ்வேறு இடங்களில் இன்று மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்படும் என CEB தெரிவித்துள்ளது

நேற்று (12) பௌர்ணமி தினம் என்பதால், குறைந்த மின்சார தேவையை பூர்த்தி செய்ய முடிந்ததால், மின் விநியோத் துண்டிப்பை இலங்கை மின்சார சபை மேற்கொள்ளவில்லை.

தற்போது, ​​நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கிகள் செயலிழந்துள்ள நிலையில், அதன் பராமரிப்புப் பணிகள் மின் பொறியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறித்த பணிகளை விரைவாக முடித்த பின்னர், மின்பிறப்பாக்கிகளை இயக்க நடவடிக்கை எடுப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதோ மின் துண்டிப்பு நேர அட்டவணை –