பலாங்கொடை நகரில் உள்ள ஒரு கள்ளு தவறணையில் இருவருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தாக்குதலால் பலத்த காயமடைந்து பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 60 வயதுடைய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபரை பலாங்கொடை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பலாங்கொடை காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.










