பதுளையில் கத்திக்குத்துக்கு இலக்காகி பஸ் சாரதி உயிரிழப்பு.!

0
208

பதுளை நகரத்தில் சேனாநாயக்கபிட்டிய பிரதேசத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகி பஸ் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் பெலிஹுலோயா, பம்பஹின்ன பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடையவர் ஆவார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது…

சம்பவத்தன்று, பஸ் சாரதி சேனாநாயக்கபிட்டிய பிரதேசத்தில் பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த போது கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.

படுகாயமடைந்த பஸ் சாரதி, வீதியில் வீழ்ந்து கிடந்துள்ள நிலையில், பிரதேசவாசிகளின் உதவியுடன் அம்பியூலன்ஸ் மூலம் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வது தொடர்பில் பதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.