மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞனுக்கு நேர்ந்த சோகம்.!

0
124

நீர்கொழும்பு – உஸ்வெட்டகெய்யாவ வீதியில் எப்பாமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பமுனுகம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) இரவு இடம்பெற்றுள்ளது.

செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மதில் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நீர்கொழும்பிலிருந்து உஸ்வெட்டகெய்யாவ நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிள் செலுத்துனரும் பின்புறத்தில் அமந்திருந்த நபரும் படுகாயமடைந்துள்ள நிலையில் பமுனுகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் உயிரிழந்துள்ளார்.

துடெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பமுனுகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.