பாதசாரி கடவையை கடக்க முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.!

0
224

தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடுவெல – கொள்ளுப்பிட்டி வீதியின் முத்தெட்டுகொட பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடுவெல பகுதியில் இருந்து கொள்ளுப்பிட்டி நோக்கி பயணித்த வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, பாதசாரி கடவையில் சென்ற பெண் மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் பலத்த காயமடைந்த பெண் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண் 71 வயதுடைய துட்டுகெமுனு மாவத்தை, தலங்கம வடக்கு பகுதியைச் சேர்ந்தவராவார்.

சடலம் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதோடு, விபத்துடன் தொடர்புடைய வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.