புசல்லாவை பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புசல்லாவை – பிளக்பொரஸ்ட் தோட்டத்தில் பாடசாலைக்குச் சென்று, பெற்றோருடன் வீடு திரும்பிய போது குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
தாய், தந்தை, மகன்மார், உறவினர் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேரே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். இதில் வீட்டின் இளைய மகனே உயிரிழந்துள்ளார். பாதிக்கப்பட்ட ஐவரில் மூவர் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்
திருச்செல்வம் சஸ்மிதன் என்ற 8 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புசல்லாவை மற்றும் கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.












