அடுத்தடுத்து நடந்த விபத்துகளில் இருவர் உயிரிழப்பு.!

0
261
Common Photo

பத்தேகம – வந்துரப வீதியில் சுதுவெலிபத பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் சுதுவெலிபொத்த பகுதியில் வசிக்கும் 50 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, கொழும்பு-கண்டி பிரதான வீதியில் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே நினைவு மேம்பாலம் அருகே, கொழும்பு-கண்டி வீதியில் இருந்து கிளைக்கு விதிக்கு பாதசாரிகள் கடக்க முடியாத இடத்தில், அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று வீதியை கடக்கும் நபர் மீது மோதியதில் விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் பேலியகொட பகுதியில் வசிக்கும் 55 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.