உயிரிழந்த மாணவன் புலமைப்பரிசில் பரீட்சையில் 159 மதிப்பெண்களைப் பெற்று சித்தி.!

0
318

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வருவதற்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் துரதிர்ஷ்டவசமாக காலமான மாணவர் ஒருவர் கடந்த புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பாக சித்தியடைந்துள்ளார்.

பலாங்கொடை, வாலேபொடை, வத்துகாரகந்த பகுதியை சேர்ந்த சுபுன் சந்தரென், இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 159 மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாக அவரது தாயார் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

பலாங்கொடை, வாலேபோட, தொரவேலகந்த பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஒரே மாணவர் சுப்புன் என்பது விசேட அம்சமாகும்.

எனினும் பரீட்சையின் பெறுபேறுகள் வௌியாவதற்கு முன்பே அம்மாணவர் திடீரென ஏற்பட்ட நோயால் காலமான நிலையில், அவர் பரீட்சையில் சித்தியடைந்துள்ள செய்தி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன், அவரின் மரணம் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.