திடீரென தீப்பற்றி எரிந்த எலக்ட்ரிக் பைக்..!

0
205

அநுராதபுரம் பொது வைத்தியசாலைக்கு முன்பாக வீதியில் பயணித்து கொண்டிருந்த எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

இந்த விபத்து இன்று வியாழக்கிழமை (23) காலை இடம்பெற்றுள்ளது.

தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளனர்.

எவ்வாறிருப்பினும், தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.