இலங்கையில் இறக்குமதிக்கு பின்னரே வாகனங்களின் விலை குறையும்.!

0
107

தனியார் வாகன இறக்குமதியை ஆரம்பிக்கும் போது வாகனங்களின் விலை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், வாகன இறக்குமதியின் மூன்றாவது கட்டமாக தனியார் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் உள்ளூர் சந்தைக்கு வரும் போது, ​​தற்போதைய போட்டி விலைகளின் அடிப்படையில், வாகனங்களின் விலை குறையலாம் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.