நிந்தவூரில் மோட்டர் சைக்கிளில் ஆற்றைக் கடக்க முற்பட்ட குடும்பம் – கணவன் உயிரிழப்பு.!

0
321

சற்றுமுன் நிந்தவூர் ஆலயக்கட்டில் கணவனும் மனைவியும், பிள்ளையுடன் மோட்டர் சைக்கிளில் ஆற்றைக் கடக்க முற்பட்ட வேளையில் ஆற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கிய நிலையில் மனைவியும் பிள்ளையும் உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதே வேளை, கணவன் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நீரில் மூழ்கி உயிரிழந்தவர் அப்பிரதேசத்தை சேர்ந்த 32 வயது இக்ராம் என்பவர் ஆவார்.

வெளிநாட்டில் தொழில் புரிந்து வந்த இவர் சில நாட்களுக்கு முன் நாடு திரும்பி இருந்த நிலையில் இன்றைய தினம் இந்த அனர்த்தத்தில் சிக்கி உள்ளார்.