யாழ் காரைநகர் கடற்பரப்பில் வைத்து தமிழக மீனவர்கள் 10 பேர் கைது.!

0
322

எல்லை தாண்டிய ஒரு படகையும் அதிலிருந்த தமிழக 10 மீனவர்களையும் கடற்படையினர் காரைநகர் கடற்பரப்பில் வைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மயிலிட்டி துறைமுகத்தில் வைத்து கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டவுள்ளனர்.

கைதானவர்கள் ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.