முதலாம் தர மாணவர்கள் குறித்து கல்வி அமைச்சு விசேட அறிக்கை.!

0
292

2025ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் திகதி குறித்து கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் முதலாம் தர மாணவர்களுக்கான வகுப்புகள் ஜனவரி 30 ஆம் திகதி வியாழன் அன்று ஆரம்பிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.