இத்தாலி நாட்டில் இருந்து வந்த யாழ் நபர், வவுனியாவில் சகோதரி வீட்டில் திடீரென உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த நபர் திடீர் சுகயீனம் காரணமாக உயிர்ழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் திருநெல்வேலியை சொந்த இடமாக கொண்டவர் என்பதுடன் இத்தாலி நாட்டில் நீண்டகாலமாக தொழில் புரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நாடுதிரும்பிய நபர், வவுனியாவில் சகோதரியுடன் வாழ்ந்து வந்த நபர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் யாழ் திருநெல்வேலியை சொந்த இடமாக கொண்ட 52 வயதான நபரே உயிரிழந்தவர் ஆவார்.
இந்நிலையில் சடலம் உடற்கூற்று சோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.











