கடற்கரையில் பொழுதை கழிக்க சென்ற 3 பேர் மாயம்.. அம்பாறையில் சம்பவம்.!

0
291

கடலில் நீராட சென்ற மூவர் காணாமல் போன சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன்கண்டி உமிரி கடற்கரையில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது தாண்டியடி உமிரி கடற்கரையில் நீராடச்சென்ற தந்தை மகன் மற்றும் அவர்களின் உறவினரின் மகன் என மூவர் காணாமல் போயுள்ளனர்.

காணாமல் சென்றவர்களை தேடும் பணியில் கடற்படையினர், மீனவர் சமுகத்தினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கமன்கண்டி தாண்டியடி உமிரி பகுதியில் கிறிஸ்மஸ் தினமான இன்று கடற்கரையில் பொழுதை கழிக்க சென்ற தாண்டியடி உமிரி கிராமத்தை சேர்ந்த 38, 15, 18, வயதை சேர்ந்தவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.