யாழில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்க்கப்பட்ட தாய்.. வெளியான காரணம்.!

0
230

யாழ். கற்கோவளம் பகுதியில் உள்ள கம்பி வலையால் மூடப்பட்ட கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண், தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த பெண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், நோயின் தாக்கத்தால் வலி தாங்க முடியாது தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும், தனது மரணத்திற்கு தானே காரணம் என்று கடிதம் ஒன்றையும் அந்த பெண் எழுதி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச் சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தாயான விமலதாஸ் சிந்துஜா என்ற 42 வயதுடைய தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

யாழில் கம்பி வலையால் மூடப்பட்ட பொதுக் கிணற்றில் பெண்ணின் சடலம்.! Video