காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

0
118

நாவுல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட போகஸ்பொபெல்ல பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 53 வயதுடைய போகஸ்பொபெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீடு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த போதே, மேற்படி நபரை காட்டு யானை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவுல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.