பாடசாலை மாணவர்களுக்கன சீருடை தொடர்பில் வெளியான தகவல்.!

0
199

எதிர்வரும் காலங்களில் பாடசாலை சீருடைகளை தைத்து வழங்க எதிர்பார்ப்பதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் பாடசாலை சீருடை வழங்குவதில் ஏற்படும் விரயத்தை குறைக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இதனைத் தெரிவித்துள்ளார்.