யாழில் இளம் தாய்க்கு நேர்ந்த பரிதாபம்..!

0
144

ஐந்து மாத குழந்தை ஒன்றின் தாய் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

வவுனியாவினை சேர்ந்த ரொசான் லங்கா நாயகி என்ற ஐந்து மாத குழந்தையின் தாயாரே உயிரிழந்தவராவார்.

குறித்த தாய் குருநகர் பகுதியில் உள்ள தனது சகோதரனின் வீட்டில் தங்கி இருந்த நிலையில் அதிகரித்த சளியின் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்.மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் விசாரணைகளை கொண்டதோடு உடற்கூற்று பரிசோதனைக்கும் அறிவுறுத்தினார்.

உடற்கூற்று பரிசோதனையில் இதயவால்வுகளில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இதயம் செயலிழந்தமையாலேயே உயிரிழப்பு சம்பவித்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.