காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை குறித்து வெளியான தகவல்.!

0
139

2024ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் திகதி முதல், 2024ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் திகதி வரை இலங்கை – இந்திய பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மோசமன வானிலை காரணமாக கப்பல் சேவை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இதற்கு முன்னதாக, நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன் துறைமுகம் ஆகிய இரு பகுதிகளிலும் பயணிகளின் வசதிக்காக சிவகங்கை கப்பல் 2024 நவம்பர் 15, 16, 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் இயக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2024 டிசம்பர் 18க்குப் பிறகு சேவை மீண்டும் தொடங்கும் என்றும், இந்த திட்டங்களில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் உங்களுக்குத் தெரியப்படுத்துவோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.