யாழ்ப்பாணம் வந்த மட்டக்களப்பை சேர்ந்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்.!

0
169
Common Photo

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மரண சடங்குக்கு வந்த மட்டக்களப்பை சேர்ந்த பெண் ஒருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியை சேர்ந்த குகதாஸ் விஜிதா (வயது-40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உரும்பிராய் பகுதியில் நடைபெற்ற மரண சடங்குக்கு கடந்த 09 ஆம் திகதி வருகை தந்த குறித்த நபர் மறுநாள் மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும் போது கொக்காவில் பகுதியில் வைத்து பன்றி ஒன்று வீதியின் குறுக்கே ஓடியதில், அவர் பயணித்த வாகனம் பன்றியுடன் மோதி விபத்துக்கு உள்ளானது.

விபத்தில் படுகாயமடைந்தவரை மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் புதன்கிழமை (13) அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.