யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தருக்கு நேர்ந்த பரிதாபம்..!

0
165

யாழ்ப்பாணம் – மானிப்பாய் – கைதடி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதன்போது வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.

இந்நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது வீதியில் மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை முந்திச் செல்வதற்கு முயற்சித்துள்ளார். அப்போதே அந்த மோட்டார் சைக்கிளுடனும் மோதி சம்பவ இடத்திலேயே இவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.