முச்சக்கரவண்டி – லொறியுடன் மோதி விபத்து..!

0
263

மத்துகம – பெலவத்தை வீதியில் மீகஹதென்ன பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து இன்று சனிக்கிழமை (09) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று எதிர்த்திசையில் பயணித்த லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.