வாகன வருமான உத்தரவு பத்திரம் இரண்டு நாட்களுக்கு இல்லை.!

0
113

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் காரணமாக மேல் மாகாணத்தில் வாகன வருமான உத்தரவு பத்திரம் வழங்கும் சகல கரும பீடங்களும் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன.

அதன்படி எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் அந்த கரும பீடங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மேல் மாகாண பிரதம செயலாளர் எஸ்.எல். தம்மிகா கே விஜயசிங்க அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,பாராளுமன்ற தேர்தல் முடிந்து பணிகள் ஆரம்பிக்கும் முதல் நாளிலேயே அபராதம் ஏதுமின்றி உரிய கட்டணத்தைச் செலுத்தி வாகன வருமான உத்தரவு பத்திரத்தை பெற வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.