கண்டியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் சடலமாக மீட்ப்பு.!

0
117

கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பிட்டிய மீகனுவ வீதியில் முச்சக்கரவண்டிக்கு அருகில் வீழ்ந்து கிடந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

நேற்று (06) மாலை வாகன விபத்து தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, ​​கண்டி நோக்கிய வீதியின் வலதுபுறத்தில் உள்ள மின்கம்பமொன்றுக்கு அருகில் முச்சக்கரவண்டி ஒன்று நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அதன் சாரதி என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் முச்சக்கரவண்டிக்கு அருகில் விழுந்து கிடந்துள்ளார். குறித்த நபர் அதிகாரிகளால் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வெரெல்லகம பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.