CTB பஸ் – முச்சக்கரவண்டி மோதி விபத்து.. யுவதிக்கு நேர்ந்த நிலைமை..!

0
344

இன்று (04) காலை 11.00 மணியளவில் பாணந்துறை – ஹொரணை வீதியின் பொல்கொட பிரதேசத்தில் முச்சக்கரவண்டியுடன் அரச பேரூந்து மோதியதில் முச்சக்கரவண்டியின் பின்னால் பயணித்த 25 வயதுடைய யுவதி படுகாயமடைந்துள்ளார்.

RDA யால் மேற்கொள்ளப்பட்ட வீதி சீரமைப்புப் பணியின் காரணமாக ஒரு பாதை மூடப்பட்டிருந்த வேளையில் பேருந்து வலது பாதையில் வந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பாக வாகனங்களை செலுத்துவதன் மூலம் விபத்துக்கள், உயிர் சேதங்களை குறைத்துக்கொள்ள முடியும்.

2024 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் பதிவான வீதி விபத்துக்களில் சுமார் 2000 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.