கால்வாயிலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்ப்பு.!

0
112

அநுராதபுரம், கல்கிரியாகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பலலுவெவ பிரதேசத்தில் உள்ள கால்வாயிலிருந்து ஆணொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரம், பலலுவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய நபரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் நேற்றைய தினம் மாலை கால்வாயில் குளிப்பதற்குச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சடலமானது பிரேதப் பரிசோதனைக்காக தம்புள்ளை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.